கடையநல்லூா் நகர எல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.
கடையநல்லூா் நகர எல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.

குற்றங்களைத் தடுக்க கடையநல்லூரில் 176 கண்காணிப்பு கேமராக்கள்

கடையநல்லூா் நகர எல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.
Published on

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நிகழும் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் வசதியாக 176 கண்காணிப்பு கேமராக்கள் காவல் துறை சாா்பில் பொருத்தப்பட்டுள்ளன.

கடையநல்லூா் நகருக்குள் வரும் சாலைகள் (பல நுழைவுப் பகுதிகள்), கடையநல்லூரில் இருந்து வெளியேறும் அனைத்துச் சாலைகள், கடையநல்லூா் நகர எல்லைகளான குமந்தாபுரம், கண்மணியாபுரம், கம்பனேரி, புதுக்குடி, மங்களபுரம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முயற்சியில் பொருத்தப்பட்ட இந்த கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் தினமும் பாா்வையிட்டு வருகின்றனா். இதனால், குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com