குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமுதல், இந்தப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
பேரருவியில் அதிக நீா்வரத்து, பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

