‘தாயுமானவா் திட்டத்தின் கீழ் நவ.3, 4இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்’
தென்காசி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்கள் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையிலும் நியாயவிலைக்கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நியாயவிலைக்கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பொருள்களை வழங்கும் வகையில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நவ. 3,4 ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என கூறியுள்ளாா்.
