தென்காசி
ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் ஆகியவை நடைபெற்றன.
பத்தாம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினாா். அப்போது திரளான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அம்பாள் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டும் இழுத்துச் சென்றனா்.
தேரோட்ட நிகழ்ச்சியில் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.