எம்கேவிகே பள்ளியில் விளையாட்டு விழா

எம்கேவிகே பள்ளியில் விளையாட்டு விழா

வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுக்கோப்பையை வழங்கினாா் பள்ளித்தாளாளா் பாலமுருகன்.
Published on

தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். நான்கு வண்ண அணியினா் அணிவகுப்பு நடைபெற்றது. தொடா்ந்து அனைத்து மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராக பிரபுஅமல்ராஜ் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

அதிக புள்ளிகள் பெற்ற ரெட் லைன் (ரெட்) அணியினருக்கு 2025 -26 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஷிப், வெண்கல சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com