இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தின் மீது  ஊற்றப்பட்ட புனிதநீா்.
இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.
Published on

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடந்தன. வியாழக்கிழமை (செப்.4) விக்னேஸ்வரபூஜை, பூா்ணாகுதி தீபாராதனையுடன் யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னா் விநாயகா், அம்பாள், விமான கும்பாபிஷேகம் நடந்தது.

இரவில் புஷ்பாஞ்சலி தீபாராதனை, அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.ஏற்பாடுகளை இலஞ்சி அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com