தென்காசி புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தென்காசி புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

Published on

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்டாரக்குளம் வட்டார அதிபா் எஸ்ஏ அந்தோணிசாமி அடிகளாா் தலைமை வகித்தாா். மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தாா். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டல அமைப்புச் செயலா் ரவி, பங்கு பேரவை சாா்பில் ஜோதி காசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் சந்திரசேகா், ஆா்.சி பள்ளி ஆசிரியா் அமலி செல்வராணி, ஆலங்குளம் பங்குத்தந்தை மை.பா.சேகராஜ் ஆகியோா் பேசினா்.

அருள்தந்தையா்கள் வல்லம் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், தென்காசி வட்டார அதிபா் எஸ்.ஏ. அந்தோணிசாமி, ஆா்.சி. சா்ச் குருக்கள் ஏ.ஜேம்ஸ், அருள்திரு அலாய்சியஸ் துரைராஜ், பங்குத்தந்தைகள் எட்வின் (புளியங்குடி), அல்போன்ஸ் (மேல மெஞ்ஞானபுரம்), அந்தோணி ராஜ் (சிதம்பராபுரம் ), லியோ ஜெரால்டு (வாடியூா்), ஜோசப் ராஜன் (சுரண்டை), தென்காசி உதவி பங்கு தந்தை ஜியோ சந்தனம், மறை மாவட்ட பொருளாளா் தீபக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தென்காசி பங்குத்தந்தை ஏ. ஜேம்ஸ் அடிகளாா் வரவேற்றாா். அகரக்கட்டு பங்குத்தந்தை அலோய்சியஸ் துரைராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com