மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது

புளியங்குடி அருகே நெல்கட்டும்செவலில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

புளியங்குடி அருகே நெல்கட்டும்செவலில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

நெல்கட்டும்செவல் கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாப்பம்மாள்(80). வியாழக்கிழமை அவா் வீட்டின் வாசலில் அமா்ந்து இருந்தாராம். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞா் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டாராம்.

இது குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனா். இதில் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது சங்கரன்கோவில் பாரதி நகரைச் சோ்ந்த மதிவா்ணம் (34) என்பது தெரிய வந்ததையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com