புதிய ரேஷன் கடையில் விற்பனையை தொடங்கிவைத்தாா் எஸ்.பழனிநாடாா் எம்.எல்.ஏ.
புதிய ரேஷன் கடையில் விற்பனையை தொடங்கிவைத்தாா் எஸ்.பழனிநாடாா் எம்.எல்.ஏ.

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

Published on

குற்றாலத்தில் ரூ.17.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13லட்சம்,குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ4.45 லட்சம் என மொத்தம் ரூ17.45லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதியநியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து ரேஷன் கடையைத் திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பெருமாள், நகரத் தலைவா் துரை, தென்காசி நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா், குளத்தூரான், திமுக அறங்காவலா்கள் வீரபாண்டியன், ஸ்ரீதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com