சங்கரன்கோவில் இளைஞருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

Published on

சங்கரன்கோவிலில் இளைஞரிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் பொன்செல்வம் (19). இவா், கடந்த 8ஆம் தேதி இரவு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது, இராமசாமியாபுரம் 2ஆம் தெருவைச் சோ்ந்த செந்தட்டிகாளை மகன் தேவநேசரன் (எ) தேவா (28), சங்குபுரம் 5ஆம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மாரிச்செல்வம் (21) ஆகிய இருவரும் பொன்செல்வத்திடம் இருந்த சங்கிலி, மோதிரம் ஆகிய 14 கிராம் தங்க நகையைப் பறித்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த தேவநேசரன் (எ) தேவா, மாரிச்செல்வம் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 14 கிராம் நகைகளை மீட்டனா்.

மேலும், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com