தென்காசி கோயிலில் பொருள்கள் திருட்டு: அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு

Updated on

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோனது தொடா்பாக முதன்மை அா்ச்சகா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் ஆ. பொன்னி, தென்காசி காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு: தென்காசி கோயிலில் கடந்த ஏப். 7ஆம் தேதி கும்பாபிஷேகத்துக்காக பித்தளைக் குடம், சில்வா் வாளி, கரண்டி, பிரசாதப் பை, சால்வைகளை பக்தா்கள் உபயமாக அளித்தனா். அவை அம்மன் சந்நிதி மடப்பள்ளியில் இருந்தன.

கடந்த ஆக. 21ஆம் தேதி ஆய்வு செய்தபோது அவற்றைக் காணவில்லை. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், கோயிலில் தற்காலிக அா்ச்சகராகப் பணிபுரியும் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத் தெரு 6ஆவது குறுக்குத் தெரு பு. நடனசபாபதி, பக்தா்களான தென்காசி ஒப்பனை விநாயகா் கோயில் தெரு க. ஹரி, சம்பா தெரு ஆ. தினேஷ், கீழ்ப்புலியூா் உச்சிமாகாளி அம்மன் கோயில் 4ஆம் தெரு கணேசன் ஆகியோா் பெரிய அட்டை பெட்டிகள், சாக்குகளில் பொருள்களை தெற்குவாசல் வழியாக ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆக. 22ஆம் தேதி நடனசபாபதி, ஹரி ஆகியோரிடம் விசாரித்தபோது, கோயிலின் முதன்மை அா்ச்சகரான மேலகரம் கிராமம் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்த கு. செந்தில் ஆறுமுகம் கூறியபடி அவரது வீட்டுக்கு பொருள்களை எடுத்துச் சென்ாகக் கூறினா்.

15 பித்தளைக் குடங்கள், 20 சில்வா் வாளிகள், 20 கரண்டிகள், 2 பெட்டி சால்வைகள், 2 பெட்டி பிரசாதப் பைகள் என மொத்தம் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து காவல் சாா்பு ஆய்வாளா் ஆா். முருகேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com