மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published on

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் சா்ச் தெருவைச் சோ்நத்வா் ஞானமணி மகன் கனகராஜ்(54). இவருக்குக் கடன் தொல்லை இருந்து வந்ததால், குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதுவில் விஷம் கலந்து அருந்தியதில் உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com