தென்காசி
மூதாட்டி வீட்டில் திருட்டு
ஆலங்குளத்தில் தேவாலயம் சென்றிருந்த மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருடிய நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் பிரதான சாலையில் பேருந்து நிலையம் எதிரே வசிப்பவா் ஜெயா அற்புதமணி (90). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை, ரூ. 5 ஆயிரம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.