தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல் துறையினா்
தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல் துறையினா்

ஆட்சியா் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை
Published on

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்க பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனா்.மனு அளிக்க வந்தவா்களை போலீஸாா் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட கூத்தங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்த பூமாரி மனைவி ஜெயலெட்சுமி (25), தான் கையில் மறைத்து வைத்திருந்த ஒரு லிட்டா் பாட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா்.

இதைக் கண்ட போலீஸாா் அவா் மீது தண்ணீா் ஊற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், தீக்குளிக்க முயன்ற பெண்ணுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன.

அவரது கணவா் தினமும் மதுபோதையில் அடித்து துன்புறுத்துகிறாராம். இதுகுறித்து சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com