ஆய்க்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடக்கம்

ஆய்க்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடக்கம்

Published on

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் நிழற்குடை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆய்க்குடி பேரூராட்சி பொதுநிதி திட்டம் 2025-26-இன் கீழ், ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் ஆய்க்குடி இடைகால் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்றத் தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

செயல் அலுவலா் ஞா. தமிழ்மணி, இளநிலைப் பொறியாளா் பி. சிவக்குமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா் மா. உலகம்மாள் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com