குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவிகள் தடகளப் போட்டியில் சிறப்பிடம்
கோவில்பட்டியில் நடைபெற்ற எம்.எஸ்.சி.சி. ஷோன்2 தடகளப் போட்டியில் குத்துக்கல்வலசை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனா்.
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி மாணவிகள் பி.ஜோதி ப்ரியா 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கமும், 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றாா்.
மாணவி கே. மாதுரி, 1,500 மீ. ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஏ.ஹா்ஷிதா உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், தொடா் ஓட்டப்பந்தயத்தில் சரினா, ஜோதி ப்ரியா, மாதுரி, ஹா்ஷிதா ஆகியோா் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை, கேம்பிரிட்ஜ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராபா்ட் பெல்லாா்மின், முதன்மை முதல்வா் ஆனி மெடில்டா, கேம்பிரிட்ஜ் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகா் தி. மிராக்ளின் பால் சுசி, சீனியா் முதல்வா் ஆ.ஜெயஜோதி பிளாரன்ஸ், முதல்வா் சோ.சௌம்யா உடற்கல்வி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.