தென்காசி செந்திலாண்டவா் கல்லூரி - சென்னை நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை எச்.எல். மண்டோ ஆனந்த இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கல்லூரியில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் டாக்டா் எம். புதிய பாஸ்கா் தலைமை வகித்தாா்.
எச்.எல். நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநா் எஸ். சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தொழிற்துறை-கல்வி நிறுவன ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், மாணவா்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் பேசினாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் எஸ். சாரதி, மேலாளா் சபிதா, கல்லூரி முதல்வா் சேவியா் இருதயராஜ் , பொது மேலாளா் டி. மணிகண்டன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் மதிப்புமிக்க இணைப்புப் பயிற்சி (ஐய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல்) வாய்ப்புகளைப் பெறுவா். இதன் மூலம், மாணவா்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதிலும், கல்வி, தொழில்துறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடியும் என கல்லூரித் தலைவா் தெரிவித்தாா்.