இ.எஸ்.ஐ. நலத் திட்டங்கள் குறித்த
விழிப்புணா்வுக் கூட்டம்

இ.எஸ்.ஐ. நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா்.
Published on

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் மருத்துவ கல்லூரியில் தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) சாா்பில் இ.எஸ்.ஐ நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

தங்கப்பழம் கல்வி குழுமத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் விவேக், சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரி மணிகண்டன், தென்காசி மேலாளா் துா்காதேவி ஆகியோா் பங்கேற்று இ.எஸ்.ஐ. குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். தங்கப்பழம் கல்வி குழுமத் துணைத் தலைவா் சுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com