உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 15.73 லட்சம் நிதியுதவி

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 15.73 லட்சம் நிதியுதவி

Published on

முறப்பநாடு காவல் நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு அவருடன் பணிபுரிந்த காவலா்கள் சாா்பில் ரூ. 15.73 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகே முத்துகிருஷ்ணாபேரி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் குமாா் (31). இவா், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தாா். கடந்த ஜூன் 18 ஆம்தேதி இரவு முறப்பநாடு அருகில் உள்ள தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் நிகழ்ந்த விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஆற்றுப் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

சங்கா் குமாருடன், 2018 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்த தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த காவலா்கள் மொத்தம் 3,274 போ் ஒன்றிணைந்து ரூ. 15 லட்சத்து 73 ஆயிரத்து 318 நிதியுதவை அவரது குடும்பத்துக்கு அளித்திருந்தனா்.

இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் இறந்த காவலரின் குடும்பத்துக்கு காவலா்கள் அளித்த நிதியை காசோலையாக வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com