கடையநல்லூா், சிவகிரியில் நாளை மின்தடை

Published on

கடையநல்லூா், சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (செப்.20) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடையநல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தாா்க்காடு, போகநல்லூா், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி, நயினாரகரம், சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

சிவகிரி பகுதிகளில்...விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி, சுற்றுப் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com