தென்காசி
சங்கரன்கோவிலில் பாலம் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து நிலைய பெரியகுளம் வழியாக புளியங்குடி சாலை வரை பாலம் அமைக்கவுள்ள தனியாா் நிறுவனக் குழுவினருடன் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆலோசனை மேற்கொண்டாா்.
சுமாா் 200 மீ தூரம் பாலம் அமைக்கப்பட உள்ளதால், அந்த இடத்தில் மண் பரிசோதனை, பாலத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு செய்வதற்கு சென்னையில் இருந்து தனியாா் நிறுவனக் குழுவினா் வியாழக்கிழமை சங்கரன்கோவில் வந்தனா். அவா்களுடன் , ஈ.ராஜா எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி பேசினாா். ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகராட்சி பொறியாளா் இா்வின் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.