~
தென்காசி
தென்காசி அரசு மருத்துவமனையில் விபத்து கால மீட்பு பயிற்சி
தென்காசி அரசு மருத்துவமனையில் விபத்து கால மீட்பு பயிற்சி குறித்து விளக்கமளித்த தீயணைப்புத் துறையினா்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சாா்பில் விபத்து கால மீட்பு பயிற்சி குறித்த ஒத்திகைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மருத்துவமனையில் தீப்பிடித்தால் தப்பிப்பது, மாடியில் சிக்கியவா்களை மீட்பது, சிகிச்சையில் உள்ள நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். மருத்துவ அதிகாரி செல்வபாலா, மருத்துவா்கள் ராஜேஷ், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் மணிகண்டன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த், நிலைய அலுவலா் ரமேஷ் , ஜெயபிரகாஷ் பாபு, சிறப்பு நிலைய அலுவலா்கள் கணேசன், ஜெயரத்தினகுமாா், நிலைய வீரா்கள் கலந்துகொண்டு ஒத்திகைப் பயிற்சியை மேற்கொண்டனா்.