முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். உடன், ஈ. ராஜா எம்எல்ஏ.
முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். உடன், ஈ. ராஜா எம்எல்ஏ.

சங்கரன்கோவிலில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடா்பான மாவட்ட அளவிலான முகாமை ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, தனியாா் வேளாண் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பொறியாளா்கள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். டிராக்டா்கள், உபகரணங்களை விவசாயிகள் கையாளும் முறை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் சுந்தர்ராஜன், வட்டாட்சியா் பரமசிவன், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com