அருணாசலபுரம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீகிருஷ்ணா்
அருணாசலபுரம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீகிருஷ்ணா்

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

Published on

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் நீண்டவரிசையில் நின்றுதரிசனம் செய்தனா். மாலையில் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

இலஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு மேல் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைக்குப் பின் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சநேயா், ராமா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள அருணாசலபுரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகிருஷ்ணா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அனைத்து கோயில்களிலும் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

 சிறப்பு அலங்காரத்தில் இலஞ்சி வரதராஜபெருமாள்
சிறப்பு அலங்காரத்தில் இலஞ்சி வரதராஜபெருமாள்
 ராமா் அவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சநேயா்.
ராமா் அவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சநேயா்.
 சிறப்பு அலங்காரத்தில் செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள்.
சிறப்பு அலங்காரத்தில் செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள்.

X
Dinamani
www.dinamani.com