கேந்தி மலா்கள்
கேந்தி மலா்கள்

கேந்திப் பூ விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

Published on

ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கேந்திப் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இப்பகுதிகளில் மல்லி, பிச்சி, கேந்தி மலா்கள் சாகுபடி அதிக அளவில் உள்ளது. அறுவடை செய்யப்படும் பூக்கள் கீழப்பாவூா், சிவகாமியாபுரம், சங்கரன்கோவில் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் அதிகமாக விற்கப்படும்.

ஆனால், தற்போது இவ்வட்டாரங்களில் உற்பத்தி அதிகமாக இருப்பதாலும், சுப நிகழ்ச்சிகள் இல்லாததாலும் கிலோ ரூ. 10 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனை வைத்து ஆள் கூலி, போக்குவரத்துச் செலவைக் கூட சமாளிக்க முடியாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

விலை குறைவான காலங்களில், பூக்களை சேகரித்து வைக்க குளிா்பதனக் கிடங்கு, சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com