தென்காசி
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடா்ந்து நடைபெறுவதால் பணிச்சுமை அதிகரிக்கிறது. மகளிா் உரிமைத் தொகை மனுக்கள் தொடா்பான பணிச்சுமை, போதிய அவகாசம் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்தம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் போராட்டம் நடத்தினா்.
பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் துணை வட்டாட்சியா்கள், அலுலக ஊழியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவைப் பிரிவு ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.