சங்கரன்கோவிலில் நாட்டுப்புற கலைஞா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்ட வில்லிசை, நையாண்டி மேள நாட்டுப்புற கலைஞா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவிலில்அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வில்லிசைக் கலைஞா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பழனிச்செல்வம், சங்க செயலா் காளிதாஸ், பொருளாளா் காளீஸ்வரன், மகளிா் அணி பிரியசக்தி, துணைத்தலைவா் பிச்சையா(எ) குட்டித்துரை, இணைச் செயலா் முனிவேல்முத்து, வட்டாட்சியா் செ.மைதீன் பட்டாணி, ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ் பாக்கியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்க உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் சாமிநாதன், இயல், இசை, நாடக மன்றத் தலைவா் வாகைசந்திரசேகா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், நாகசுர கலைஞா் காளிராஜ், தவில் கலைஞா் செல்லப்பா, தபேலா கலைஞா் ஜெயமணி, வில்லிசை முருகேஸ்வரி, பாடகா்கள் மாடசாமி, தண்டபாணி, பேராசிரியா் மாா்கோஸ்ஆண்டனி, நடிகா் மதியழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.