தென்காசியில் அக். 2 வரை ‘லோக் கல்யாண்’ சிறப்பு முகாம்

Published on

தென்காசியில் சாலையோர வியாபாரிகளுக்கு அக். 2 வரை லோக் கல்யாண் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் உணவு பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

லோக் கல்யாண் சிறப்பு முகாமில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குவது உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகின்றன. முகாம், செப். 17 முதல் அக். 2 வரை நடைபெறும். எனவே, தென்காசி நகராட்சிக்குள்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு, பயனடைய வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com