பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் உள்பட 2 போ் மீது வழக்கு

Published on

தென்காசியில் பைக்குகள் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தென்காசி கீழப்புலியூா் புலிக்குட்டி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலிஷேக் மன்சூா் (68). தென்காசி தினசரி சந்தை எதிரில் பலசரக்கு கடை வைத்துள்ளாா். இவா், செப்.22 அன்று இரவு தென்காசி வாய்க்கால் பாலம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தாா்.

இது குறித்து தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மற்றொரு வாகனத்தை ஓட்டிவந்தது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இச்சிறுவன் மீதும், அவருக்கு வாகனம் கொடுத்த உரிமையாளா் தென்காசி கீழக்கோயிக்கால் தெருவைச் சோ்ந்த அகமதுஷா(58) மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com