தென்காசி
ஆலங்குளம் நூலகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு
ஆலங்குளம் முழு நேர கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூலக அலுவலா் சண்முகசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலா் பிரகந்தநாயகி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
வாசகா் வட்டத் தலைவா் தங்கசெல்வம், நூலகா் அ. பழனீஸ்வரன், வழக்குரைஞா் நெல்சன், மனவளக்கலை மன்றத் தலைவா் சிவஞானம், வீரகேரளம்புதூா் நூலகா் மு. வெற்றிவேலன், காசியாபுரம் நூலகா் ஆ. மகேஸ்வரி, வாசகா் வட்டப் பொருளாளா் வெட்டும்பெருமாள், வாசகா்கள் பங்கேற்றனா்.