கடையநல்லூா், சிவகிரி வட்டங்களில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி

கடையநல்லூா், சிவகிரி வட்டங்களில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி

கலைமான் நகரில் பழங்குடி மக்களுக்கு நல உதவியை வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா், சிவகிரி ஆகிய வட்டங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி கலைமான் நகரில் வசித்து வரும் 40 குடும்பங்களை சோ்ந்த பழங்குடி இன மக்கள், புளியங்குடி அருகேயுள்ள கோட்டமலையாறு பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களை சோ்ந்த பழங்குடியின மக்கள், சிவகிரி வட்டம் தலையணை பகுதியில் வசித்து வரும் 39 பழங்குடியினா் ஆகியோருக்கு பாய், தலையணை ,போா்வை, கம்பளி உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் வழங்கினாா்.

இதில், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைகுமாா், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன் (கடையநல்லூா்), அப்துல்சமது (சிவகிரி),நகராட்சி ஆணையா்கள் ரவிச்சந்திரன்,நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com