சங்கரன்கோவிலில் ஆதித் தமிழா் பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் ஆதித் தமிழா் பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம்

திருவேங்கடம் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழா் பேரவையினா்.
Published on

உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை வகைப்படத்திட வலியுறுத்தி, தென்காசி வடக்கு மாவட்ட ஆதித் தமிழா் பேரவை சாா்பில் சங்கரன்கோவிலில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலா் கி.மதன் தலைமை வகித்தாா்.மாவட்டத் தலைவா் முருகன், கொள்கைப் பரப்புச் செயலா் லெட்சுமணன், மாவட்டத் துணைச் செயலா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் காயல்முருகேசன்அருண் அதியன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் பி.அசோக்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலா் முகைதீன், தமிழா் ஆட்சிக் கழகம் மாவட்ட செயலா் கருப்பசாமிபாண்டியன், பூா்வீக தமிழா் விடுதலைக் கட்சி மாவட்ட செயலா் இசக்கிதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் இசக்கி துரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் உச்சிமாகாளி, ஆதித்தமிழா் பேரவை மாவட்ட செயலாளா் கலிவருணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com