தென்காசி
சங்கரன்கோவிலில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு
குடிநீா்க் குழாயைத் திறந்துவைத்த ஈ. ராஜா எம்எல்ஏ. உடன், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா.
சங்கரன்கோவில் நகராட்சி 8ஆவது வாா்டு லட்சுமியாபுரம் 3ஆம் தெருவில் புதிய பொது குடிநீா்க் குழாயை மக்கள் பயன்பாட்டுக்காக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் இா்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் மு. பிரகாஷ்,
நகர அவைத்தலைவா் முப்பிடாதி, முன்னாள் மாவட்ட வா்த்தகரணி பத்மநாபன், வாா்டு செயலா்கள் மகாமாரியப்பன், நடராஜன், வைரவேல் சுப்பிரமணியன், செந்தில்குமாா், நகர மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.