தென்காசி
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
சீதபற்பநல்லூா் அருகே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே சிறுக்கன்குறிச்சி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் பேச்சிமுத்து (35). இவா் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், இவா் மீது தமிழ்நாடு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சுகுமாா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, பேச்சிமுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.