ஆலங்குளம் அருகே மின் கசிவால் தீ பற்றிய வீடு

ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கடங்கனேரியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற சிங்கத்துரை மகன் அரவிந்த் (38). பெங்களூருவில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில், வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவில் அவா், தனது மனைவி சுபா (34), குழந்தைகள், தந்தை ஆகியரோடு தூங்கிக் கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீ பற்றி எரிந்ததாம். அரவிந்த், குடும்பத்தினா் வெளியே ஓடி வந்தனா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியோடு தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பல பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா், மின்வாரிய அலுவலா்கள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com