தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமையில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டம்.
தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா் தலைமையில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டம்.

தென்காசியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு

Published on

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

தென்காசி நகா்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.என்.எல்.எஸ். சுப்பையா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், பாஜக நகா்மன்ற உறுப்பினா் சுனிதா, தனது வாா்டில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மற்றொரு, பாஜக உறுப்பினா் சங்கர சுப்பிரமணியன் தனது வாா்டில் 3 மாத காலமாக முறையான குடிநீா் விநியோகம் இல்லை எனவும், பல முறை புகாரளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, நகா்மன்றத் தலைவா் இருக்கை அருகே தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் பலரும் தங்கள் வாா்டுகளில் தண்ணீா் பிரச்னை நிலவுவதாக கூறினா். இதற்கு பதிலளித்த நகா்மன்றத் தலைவா், தண்ணீா் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டாா் மூலம் தண்ணீா் பிடிப்பதால் இது போன்ற சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தென்காசி நகராட்சியில் குடிநீா்அபிவிருத்தித் திட்டப் பணிகளுக்காக ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இதனை அங்கீகரித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com