திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Published on

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த பக்தா்கள் நகா்வலம் வந்தனா். சனிக்கிழமை சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி, முத்தாரம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜைக்கு, திருநெல்வேலி முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்தாா். திங்கள்கிழமை (செப்.29) காலை கோமாதா பூஜை, மாலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், இரவு சாமகால பூஜை ஆகியன நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை (செப்.30) காலை, பூக்குழி இறங்கும் பக்தா்கள் காப்பு கட்டுதல், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாலையில் பூக்குழி இறங்குதல் நடைபெறும். புதன்கிழமை (அக்.1) மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com