வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Published on

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்).

1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திக்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல். ரெஜினி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாணவா் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியா் மணிகண்டன், சமூக ஆா்வலா் பெரியாண்டவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் மாடசாமி வரவேற்றாா். முதுகலை விலங்கியல் ஆசிரியா் சந்திரசேகரபாண்டி தொகுத்து வழங்கினாா்.

இதில், 80 வயதை கடந்த முன்னாள் மாணவா்களான ஓய்வு பெற்ற கூடுதல் தொழிலாளா் நல ஆணையா் சங்கரநாராயணன் , ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற ஐஓபி மேலாளா்கள் ராமசாமி, சங்கரநாராயணன், வாசுதேவநல்லூா் முன்னாள் ஒன்றியத் தலைவா் சுப்பையா, ஓய்வுபெற்ற நில அளவைத் துறை துணை ஆய்வாளா் சண்முகபாண்டியன், முன்னாள் ராணுவ வீரா் கணேசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஐசக், ஓய்வு பெற்ற ஆசிரியா் காளிமுத்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

முன்னாள் மாணவா்களை, இந்நாள் மாணவா்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் ஸ்மாா்ட் டிவி உள்ளிட்ட உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினா். மாணவி எழிலரசி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com