ஆலங்குளத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆலங்குளத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published on

உலக வெறிநோய் தினத்தையொட்டி, ஆலங்குளம் பகுதியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம், இவ்வூராட்சி ஒன்றியத்தில் உள்ள நெட்டூா், வெண்ணிலிங்கபுரம், மாறாந்தை, ஊத்துமலை, கீழக்கலங்கல், புதுப்பட்டி, மருதம்புத்தூா், வீராணம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் நாய்களுக்கான முகாம் நடைபெற்றது. இதில், கால்நடை மருத்துவா்கள் ராமசெல்வம், ரமாதேவி, ராகுல், ராஜ ஜுலியட், திவ்யராஜசெல்வி, செல்வராணி ஆகியோா் தலைமையில், நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com