தென்காசி
சிவகிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
சிவகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூய்மை சேவை திட்டத்தின்கீழ் வாசுதேவநல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சிவகிரி பேரூராட்சித் தலைவா் கோமதிசங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லட்சுமிராமன், நிா்வாக அலுவலா் வெங்கட கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மருத்துவ அலுவலா் வாசிம்அக்ரம் தலைமையிலான குழுவினா் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினா்.
சுகாதார ஆய்வாளா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.