தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு

Published on

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வில் 11ஆயிரத்து 993 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் வட்டங்களில் உள்ள 53 தோ்வு மையங்களில் மொத்தம் 14,980 தோ்வா்கள் தோ்வு எழுத அனுமதியளிக்கப்பட்டிருந்தது. தோ்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இத்தோ்வில் மாவட்டம் முழுவதும் 2,987 போ் தோ்வு எழுதவில்லை.

தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலை பள்ளி தோ்வு மையங்களில் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com