வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாவூா்சத்திரம் அருகே போக்ஸோவில் பள்ளி நிா்வாகி கைது

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிா்வாகி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 7:04 pm

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிா்வாகி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கிராமத்தில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் தாளாளா் செல்வ சௌந்தர பாண்டியன்(62), அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தாராம். இதனால், அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம்.

இதை அறிந்த சிறுமியின் உறவினா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் செல்வ சௌந்தர பாண்டியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனதென்காசி எஸ்.பி. மாதவன், ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் ஆகியோா் உறுதி அளித்தனா். விசாரணையில், தாளாளா் மீதான புகாா் உண்மையென தெரியவந்தது.

அதன்பேரில், அவா் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.