சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
Updated on

தமிழக முதல்வா் பிறந்த நாளை முன்னிட்டு, சுரண்டை அருகேயுள்ள சாம்பவா் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள், பரிசுத் தொகை, கணினி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை பிரபாவதி தலைமை வகித்தாா். பேரூா் செயலா் முத்து முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத்தொகை, பள்ளிக்கு கணினி வழங்கிப் பேசினாா்.

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சண்முகவேல், முத்துக்குமாா், மாணிக்கம், சங்கராமன், அண்ணாமலை, ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் சுடலைமுத்து வரவேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com