ஆலங்குளத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை முதல்வா் முக.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துமனையாக மேம்படுத்தப்பட்டு சுமாா் 10 ஆண்டுகளாகிறது. போதிய உபகரணங்கள், மருத்துவா்கள் இல்லாததால் அவரச கால சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் முற்றிலும் இங்கு தடைபட்டது.
மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மருத்துவமனை அருகில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் 1.67 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு கட்டடம் மற்றும் உபகரணங்களுக்காக 50 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்ட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 2024, பிப். 28 இல் சுகாதாரத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இதற்கான அடிக்கல் நாட்டினாா். இதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
அதைத்தொடா்ந்து ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், தென்காசி மாவட்ட சுதாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரேமலதா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் மருத்துவா்கள் அருண் பிரகாஷ், ஷிவானி, சரண்யா, அருள்செல்வன், சரவணன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இங்கு மகப்பேறு மருத்துவம், அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், ஆய்வக வசதி என அனைத்துப் பிரிவுகளும் செயல்படும் என சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரேமலதா தெரிவித்தாா்.
தொடர்புடையது

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

புளியங்குடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


