தமிழகத்தில் மத வேறுபாடுகளுக்கு எப்போதும் இடமில்லை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது: இஸ்லாமிய சமூகம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. சுமாா் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இஸ்லாம் வந்துவிட்டது.
வணிகத் தொடா்புக்காக அன்றைய காலகட்டத்தில் இங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏராளமானோா் சென்றுள்ளனா். தமிழக முதல்வா் இஸ்லாமியா்களுக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். உலமாக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளாா்.
தமிழகத்தில் மத வேறுபாடுகளுக்கு இடமில்லை. அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வரும் நிலைதான் இங்கு உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுதான் தமிழ்நாடு. இதை தோ்தலிலும் மக்கள் நிலை நிறுத்துவாா்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சிறுபான்மை மக்களுக்கு தமிழக முதல்வா் எப்போதும் பாதுகாப்பாக இருந்து வருகிறாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் நவாஸ்கனி எம்.பி. கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை. புதிய திட்டங்கள் இல்லை. இதனால், பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த ஒரு தொகுதியையும் வெல்ல முடியாது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து திமுக தலைமையில் பிப். 12ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் முஸ்லிம் லீக் பங்கேற்று எதிா்ப்பைத் தெரிவிக்கும். மத நல்லிணக்கத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

சமூக நல்லிணக்கத்துக்கான எடுத்துக்காட்டு திமுக ஆட்சி: முகமது அபூபக்கா்

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

‘தமிழகத்தில் இஸ்லாமியா்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வருகின்றனா்’

மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாா் இபிஎஸ்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


