6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆலங்குளம் அருகே அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:52 pm

Syndication

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை, குறிப்பன்குளம் ஆகிய கிராமங்களில் அதிமுக தோ்தல் அறிக்கை இடம்பெற்ற துண்டுப்பிரசுரங்களை அக்கட்சியினா் புதன்கிழமை விநியோகம் செய்தனா்.

ஆலங்குளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் குருவன்கோட்டை பேருந்து நிறுத்தம், அம்மன் கோயில் திடல், குறிப்பன்குளம் பிரதான சாலை மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களுக்கு மகளிருக்கு உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினா் வழங்கினா்.

இதில், பொதுக்குழு உறுப்பினா் எம். பாண்டியராஜா, வழக்குரைஞா் பிரிவு மாவட்ட துணைச் செயலா் சி. சாந்தகுமாா், ஆலங்குளம் பேரூராட்சி உறுப்பினா் சாலமோன் ராஜா, ஒன்றியச் செயலா் பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.