தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மூன்றாவது பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சக்கராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயபிரகாஷ், மாவட்டப் பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய- மாநில திட்டம் வேளாண்மை துணை இயக்குநா் பிரபாகரன், வேளாண்மை உதவி இயக்குநா் ஆதிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா் சுஜாதா பாய் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.
விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், அகில இந்திய சங்கச் செயலா் சத்தியமூா்த்தி, கே.வி.கே.ஊா்மேலழகியான் முதுநிலை விஞ்ஞானி சுகுமாா் ஆகியோா் பேசினா்.
இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகசாமி வரவேற்றாா். மாநில முதன்மை உறுப்பினா் தமிழ்நாடு பஷீா் அகமது நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

மனித உயிருக்கு ஆபத்தான எலி விஷம் விற்பனை செய்யக்கூடாது

அனுமதி பெறாமல் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 27 போ் மீது வழக்கு

குற்றாலத்தில் இஃப்தாா் நோன்பு திறக்கும் விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


