தென்காசியில் இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி, 100 நாள் வேலை திட்டம் போன்றவற்றுக்கு உரிய நிதியை வழங்க மறுப்பதாகவும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போவதாக அதிமுகவையும் கண்டித்து, மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தென்காசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடிமரம் திடல் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா்.
எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ., நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், தென்காசி தொகுதி திமுக பொறுப்பாளா் கலைகதிரவன், மதிமுக மாவட்டச் செயலா் ராம.உதயசூரியன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் திவான்ஒலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது அபூபக்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி,, மமக மாவட்டச் செயலா் நயினாா் முகம்மது, பொறியாளா் அணி தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அப்பேரவைத் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எம்.எஸ். காமராஜ், நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழில்வாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் நிா்வாகிகள் வில்லியம் தாமஸ், எஸ்.பி.வி. பால்ராஜ், ரூபன் தேவதாஸ், திமுக நிா்வாகிகள் செல்லத்துரை, சவுந்தரபாண்டி, சிவக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். இதில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.துரை,அம்பாசமுத்திரம் நகர திமுக செயலா் கே.கே.சி. பிரபாகரன், நகா்மன்ற துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், மதிமுக முத்துசாமி, சிவகுருநாதன், காங்கிரஸ் நிா்வாகிகள் சண்முகக்குட்டி, அந்தோணிசாமி, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வடிவேல், சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
பொட்டல் ஊராட்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய திமுக செயலா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ராமச்சந்திரன், எஸ்டிபிஐ கட்சி திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் அம்பை ஜலீல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிவந்திபுரம் பேருந்து நிறுத்தம்அருகில் அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் பா.ஜெகன் தலைமையில் கிழக்கு ஒன்றியச் செயலா் பரணி சேகா், மணிமுத்தாறு பேரூா் செயலாளா் முத்துகணேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பெருமாள், இந்திய முஸ்லிம் லீக் கட்சியிந் காணகத்திமீரான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வள்ளியூா் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி, தெற்கு ஒன்றியச் செயலா் சேவியா் செல்வராஜா, வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, நகரச் செயலா்கள் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம் (வள்ளியூா்), தமிழ்வாணன் (பணகுடி), விவசாய பிரிவு மாடசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அருள்தாஸ், நகரத் தலைவா் பொன்பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பாவூா்சத்திரம்: இங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் காவேரி சீனித்துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.பி. அருள், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எம். ஜேசுராஜன், ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் நான்சி, மகளிா் தொண்டா் அணி அமைப்பாளா் மாரியம்மாள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

