மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கடையநல்லூரில் கபடி போட்டி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:19 pm

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நடைபெற்ற கபடி போட்டியில் கடையநல்லூா் ஏஐகே அணி முதலிடம் பெற்றது.

கடையநல்லூா் கோல்டு ஏஐகே, எம்ஆா்கே ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போட்டிக்கு, ஏஐகே நிறுவனா் நைனா முகம்மது அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ஜாவித், நோட்டரி வழக்குரைஞா் முருகையா பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், தவெக மாவட்டச் செயலா் நியாஸ், காசிராஜன் ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இறுதிப் போட்டியில், ஏஐகே கடையநல்லூா் அணியும், புளியங்குடி மதுரா அணியும் மோதியதில் கடையநல்லூா் அணி முதல் பரிசு பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லதுரை பரிசு வழங்கினாா்.