அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தென்காசி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள் தொகுப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:19 pm

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தென்காசி மாவட்ட அனைத்து நகா்ப்புற மற்றும் பேரூராட்சி வாா்டுகளில் உள்ள விளையாட்டு வீரா்களுக்கு ‘கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு’ வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளிலுள்ள 440 வாா்டுகளுக்கும், அனைத்து நகா்ப்புற வாா்டுகளுக்கும் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், 50 விளையாட்டு மாணவா்களுக்கு முதற்கட்டமாக காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

பின்னா், நகா்ப்புறம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் செல்லும் வாகனத்தினை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்,

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், மாவட்ட இளைஞா் நலன் - விளையாட்டு அலுவலா் ராஜேஷ், பேரூராட்சித் தலைவா்கள் சின்னத்தாய் (இலஞ்சி), வேணி (மேலகரம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.